நவகிரி கிராமத்தில் யானைகள் படையெடுப்பினால் போக்குவரத்து பாதிப்பு

 மட்டக்களப்பு – போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் உள்ள நவகிரி 38 கிராமத்தில் யானைகள் கூட்டமாக படையெடுத்து வந்துள்ளது.

குறித்த காட்டு யானைகள் இன்று(08) காலை வேளையிலேயே வருகை தந்துள்ளபோது. நவகிரி பகுதிக்கு வருகை தந்த காட்டு யானைக் கூட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்பகுதியில் தற்போது பெரும்போக வேளாண்மை அறுவடை இடம்பெற்று வருகின்ற நிலையில் இவ்வாறு காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக வயல் நிலங்களுக்குள் ஊடுருவி நெற்பயிர்களையும் துவம்சம் செய்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்துடன் கூட்டமாக மட்டக்களப்பு போரதீவுப் பற்றுப் பிரசேத்தின்அண்மித்ததாகவுள்ள சிறிய பற்றைக் காட்டுப்பகுதியில் இக்காட்டுயானைகள் தங்கியுள்ளததால், வேளாண்மை அறுவடை வேலைகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகளும் பொதுமக்களும் பெரும் அச்சத்தின் மத்தியிலேயே செயற்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.