துப்பாக்கிச் சூடு - மற்றுமொரு சந்தேகநபர் கைது!
கொழும்பு, ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த 24 ஆம் திகதி நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் நேற்று (31) இரவு கிரிஉல்ல தம்பதெனிய பிரதேசத்தில் வைத்து ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்த உண்மைகளின் அடிப்படையில் துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரிவால்வர் ரக துப்பாக்கி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 27 வயதுடைய கந்தளாய் பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் முன்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் பெப்ரவரி 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை