சிக்கன் லாலிபாப் செய்யும் முறை!!


 தேவையான பொருட்கள்

 • சிக்கன் துண்டுகள் - 8

 • தயிர் - 50 மில்லி

 • முட்டை - 1

 • சோள மா - ஒரு மேசைக்கரண்டி

 • எலுமிச்சைச் சாறு - ஒரு தேக்கரண்டி

 • மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி

 • உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில் சிக்கன் துண்டுகளை நன்றாகக் கழுவி சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் முட்டை, இஞ்சி, வெள்ளைப்பூண்டு விழுது, மிளகாய் தூள், எலுமிச்சை சாறு, தயிர், சோள மா, உப்பு என அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.

இதனைத்தொடர்ந்து சுத்தம் செய்து வைத்திருக்கும் லாலிபாப் துண்டுகளை எடுத்து ஏற்கனவே செய்து வைத்துள்ள மசாலா கலவையில் பிரட்டி எடுத்து அரை மணித்தியாலம் ஊறவைக்க வேண்டும்.

பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ந்ததும் சிக்கன் லாலிபாப் துண்டுகளை போட்டு பொரித்தெடுக்கவும்.

 1. 1/2 கிலோ சிக்கன்
 2. தேவையானஅளவு எண்ணெய் பொரிப்பதற்கு
 3. ஸ்ப்ரிங் ஆனியன்
 4. மரினேஷன் 1
 5. 1/2 தேக்கரண்டி வெள்ளை மிளகுத் தூள்
 6. 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
 7. தேவையானஅளவு உப்பு
 8. 1 தேக்கரண்டி வினிகர்
 9. 1 தேக்கரண்டி சோயா சாஸ்
 10. 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
 11. மரினேஷன் 2:
 12. 2 மேஜைக்கரண்டி சோள மாவு
 13. 2 மேஜைக்கரண்டி மைதாமாவு
 14. முட்டை
 15. சாஸ் தயாரிக்க:
 16. 2 தேக்கரண்டி எண்ணெய்
 17. 1 மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு
 18. 1மேஜை கரண்டிகழுவி பொடியாக நறுக்கிய இஞ்சி
 19. 2 மேஜை கரண்டி சிவப்பு சில்லி சாஸ்
 20. 1 மேஜைக்கரண்டி தக்காளி சாஸ்
 21. 1/2 தேக்கரண்டி மிளகுத்தூள்
 22. 1/2 தேக்கரண்டி உப்பு
 23. 1/2 தேக்கரண்டி சர்க்கரை
 24. 1 தேக்கரண்டி சோயா சாஸ்
 25. 1 தேக்கரண்டி வினிகர்
 26. 1/2 தேக்கரண்டி சோள மாவு கரைசல்

சமையல் குறிப்புகள்

 1. ஸ்டெப் 1

  ஒரு கிண்ணத்தில் சிக்கன் துண்டுகளை சேர்த்து இதோடு மரினேஷன் ஒன்றில் குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற விடவும்.

  சிக்கன் லாலிபாப்(chicken lollipop recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
 2. ஸ்டெப் 2

  அதன்பின் மாரினேஷன் 2 வில் குறிப்பிட்டுள்ள பொருட்கள் இதோடு சேர்த்து கலக்கவும்.

  சிக்கன் லாலிபாப்(chicken lollipop recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
 3. ஸ்டெப் 3

  ஒரு அகலமான பாத்திரத்தில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் வைத்து சிக்கன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  சிக்கன் லாலிபாப்(chicken lollipop recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சிக்கன் லாலிபாப்(chicken lollipop recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
 4. ஸ்டெப் 4

  ஒரு கனமான கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு வெங்காயத்தின் வெள்ளை பகுதி சேர்த்து வதக்கவும். இதோடு மிளகாய் சாஸ் தக்காளி சாஸ் சோயா சாஸ் உப்பு சர்க்கரை மிளகுத் தூள் ஆகியவற்றை சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து சாஸ்வகைகள் கருகாத வாறு கொதிக்க விடவும். இதோடு பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து ஒரு நிமிடம் அதிகமான தீயில் டாஸ் செய்யவும். இறுதியாக வினிகர் மற்றும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத் தாள் சேர்த்து கலக்கவும்.

  சிக்கன் லாலிபாப்(chicken lollipop recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சிக்கன் லாலிபாப்(chicken lollipop recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
 5. ஸ்டெப் 5

  சுவையான சூப்பரான சிக்கன் லாலிபாப் தயார்.

  சிக்கன் லாலிபாப்(chicken lollipop recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சிக்கன் லாலிபாப்(chicken lollipop recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.