ஆணொருவரின் சடலம் மீட்பு!!
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநகர் பகுதியில் ஐஸ் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள தடாகத்தில் ஆணொருவரின் சடலம் இன்று(2024.02.10) காலை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலத்தை அவதானித்த பிரதேசவாசிகள் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.
அதேவேளை குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை