துண்டிக்கப்பட்ட 10 இலட்சம் மின் இணைப்புகள்!!

 


நாடளாவிய ரீதியில் கடந்த ஆண்டில், 10 லட்சம் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியின் பாதிப்பை குறைப்பதற்கான துறைசார் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல நிறுவனங்களை விசாரணைக்குழு முன்னிலையில் அழைத்த போது இது தெரியவந்ததாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்தார்.

இந்நிலையில், துண்டிக்கப்பட்ட இணைப்புகளுக்கு மறு இணைப்பை பொருத்த கட்டணத்தை 50 சதவீதம் குறைப்பதோடு, நிலுவையில் உள்ள கட்டண தொகையை தவணையாக செலுத்த அனுமதிக்குமாறும் துறைசார் அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.