இஸ்றோவின் புதிய கண்டுபிடிப்பு!!
சூரியனின் கொரோனல் பகுதியில் இருந்து வெளியான ஆற்றலின் தாக்கத்தை ஆதித்யா விண்கலம் கண்டறிந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், சூரியனின் வெளிப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற அதிநவீன விண்கலத்தை வடிவமைத்து செப்டம்பர் 2ஆம் திகதி விண்ணில் செலுத்தியுள்ளது.
127 நாட்கள் பயணித்து, ஜனவரி 6ஆம் திகதி பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் குடியேறியது.
சூரியனின் வெளிப் பகுதியில் வெளியான ஆற்றலை ஆதித்யா விண்கலம் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்த விண்கலத்தில் சூரிய புயல்கள் மற்றும் அவற்றின் ஆற்றலை ஆய்வு செய்ய 'பாபா' என்ற பிளாஸ்மா அனலைசர் பொருத்தப்பட்டிருந்தது.
இந்த கருவி தற்போது சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
'பாபா' என்பது ஒரு சாதனமாக இருந்தாலும், இதில் 2 சென்சார்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இவை சூரியக் காற்றின் துகள்களின் அளவையும் திசையையும் அளவிடப் பயன்படுகின்றன.
கருத்துகள் இல்லை