சாதனை படைத்த தமிழ் மாணவி!📸
பிரான்ஸ் தேசத்தில் வாழும் திரு. திருமதி திலிபன் யூடி(குருநகர்) தம்பதிகளின் மகள் லேயா(Léa ) France éducation nationale சார்பில் banque de France இனால் நடாத்தப்பட்ட “PRIX DE L’EXCELLENCE ÉCONOMIQUE EN STMG «(பொருளாதாரத்திற்கான ஆராய்வும் தீர்வும்)என்ற தலைப்பிலான போட்டியில்(concours) மாவாட்ட ரீதியில் (académie Créteil) முதலாம் இடத்தினையும்,தேசிய ரீதியில்(académie nationale) மூன்றாம் இடத்தினை பெற்று தான் உயர் கல்வி கற்கும் “lycée protectorat saint Joseph (privé) Aulnay-sous-Bois இற்கு பெருமை சேர்த்துள்ளார்.மேலும் இந்த போட்டியில் 13660 மாணவர்கள் போட்டியிட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற சாதனைகளை புரிந்த இம் மாணவியையும் அவரின் பெற்றோரையும் நாம் வாழ்த்துவதுடன் இவரை போலவே இன்னும் பலர் தங்களது திறமைகளை வெளிக்கொணர வேண்டுமென சங்கம் விரும்புகிறது.
கருத்துகள் இல்லை