ஏர் நிலம்” தொண்டமைப்பு நடாத்திய பொங்கல் விழா!!


“ஏர் நிலம்” தொண்டமைப்பு  நடாத்திய சிறப்பு நிகழ்வான பொங்கல் விழா

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" என்ற மகுட வாக்கோடு முல்லைத்தீவு கற்சிலைமடு ஒட்டுசுட்டான் வரலாற்று சிறப்புமிக்க மாவீரன் பண்டாரவன்னியன் நினைவு வளாகத்தில் 2024.02.11 அன்று நடைபெற்றது. 

 புலம்பெயர் உறவுகளில் பிரதான நிதி அனுசரணையாளர்களான

திரு.செ.தயாபரன் ஜெர்மன்,

திரு.ஆ.மோகன் கனடா,

திரு.து.லிங்கேஸ்வரன் சுவிட்சர்லாந்து  ஆகியோருடன் 

இணை நிதி அனுசரணையாளர்களாக…..

திரு.நா.இராமச்சந்திரன் சுவிட்சர்லாந்து,

திருமதி ம.கிருஸ்ணவேனி கொலண்ட். ஆகியோரின் பங்களிப்புடன் குறித்த நிகழ்ச்சி  நடைபெற்றது.

  “ உழுதுண்டு வாழ்வோரே வாழ்வர்…” என்ற ஐயன் வள்ளுவன் வாக்கிற்கமைய   எமது வளத்தையும், எமது நிலத்தையும் பண்படுத்தி   தொழிலால் பலருக்கு முன்னோடியாக விளங்கிய மூத்தோரை கனம் பண்ணும் நிகழ்வு இம்முறை 04 ஆவது தடவையாக நடைபெற்றது.

       ஒட்டுசுட்டான் கற்சிலைமடு பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 10 மூத்த 

தொழிலாள இணையர்கள் பொன்னாடை மாலைகள் சூடி சினைவுச் சின்னம் வழங்கி  மதிப்பளிக்கப்பட்டனர்.


 இவ் விழாவிற்கு சிம்மக்குரலோன் அதிபர் சின்னப்பா நாகேந்திரராசா அவர்கள் தலைமை ஏற்று நிகழ்வுகளை மிகச்சிறப்பாக நெறிப்படுத்தியிருந்தார்.

  விருந்தினர்களாக வைத்தியகலாநிதி கைலாதநாதன் சுதர்சன்,

”ஏர் நிலம்” அமைப்பின் ஆலோசகர் கலாநிதி க.சூரியகுமாரி ( அதிபர்)

திரு .கனகரத்தினம் 

திரு. பார்த்தீபன் (சட்டவாளர்,) மற்றும் கமநல சேவை நிலைய குழுத்தலைவர் திரு.இ.வேதநாதன்,

 ஒட்டுசுட்டான் கிராமசேவகர் திருவாட்டி லலிதா நிவேகாந்தன், ஆயுள்வேத வைத்தியர் திரு.நாகமணி வன்னிய சிங்கம். கவிஞர்.திரு.யோ.புரட்சி, திரு.மடுத்தீன் அன்ரனி சதீஸ்குமார் "ஏர்நிலத்தன்" நிர்வாக இயக்குனர் படைப்பாளி தே.பிரியன், முல்லைதீவு மாவட்ட செயலாற்றுநர் கவிஞர் முறிகண்டி லக்சிதரன்,மன்னார் மாவட்ட செயலாற்றுனர் கவிஞர் மன்னார் பெனில்,கிளிநொச்சி மாவட்ட செயலாற்றுனர் திருமதி வதனா  மற்றும் சமூக ஆர்வலர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கிராம மக்கள் என  பலரும் கலந்து சிறப்பித்ததோடு பல்வேறு பாரம்பரிய அரங்க கலை நிகழ்வுகளான வில்லுப்பாட்டு, குடமுழுக்கு கும்மி, கோலாட்டம் கவியரங்கம் என்பவையும் சிறப்பாக நடைபெற்றன.

  சுவிட்சர்லாந்து வாழ்  “ஏர் நிலம்” தொண்டமைப்பு நிறுவுநர் து.திலக் கிரி அவர்கள் , நிதியாளர்களின் ஒன்றுசேர்ந்த அனுசரனையோடும் களத்துக்கும் புலத்துக்குமான இணைப்பாளர் திரு.நித்தி அவர்களின் ஒருங்கிணைப்புடனும் இதனை முன்னெடுத்தார். 

“நம்பி கை கொடுப்போம்

நம்பிக்கை கொடுப்போம்” 

தகவல்  -ஏர் நிலம்-


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.