பறிபோன என் நெஞ்சத்தை..!


என் நெஞ்சத்தைப்போல்- விடிந்த காலைப்பொழுதில்

அந்த முகநூலின் 

அட்டைப்படத்தை பார்ப்பதற்கென்றே 

ஓடோடி வருகிறேன் 


அதுவேதான்

தென்னம் குருத்தைத் துளைத்த வண்டாக

என் இதயத்தை 

துளைத்தபடி இருக்கிறது. 


பறிபோன என் நெஞ்சத்தை

அங்குதான் விட்டு வந்துள்ளேன்

ஏனெனில் 

ஒரு தலைக்காதல்

அந்த முகநூலின் மீது 


ஒரு பொழுதில் பதிவுகள் இன்றி வெறிச்சோடியாகவும்

சில சமயங்களில் 

வைகாசிப் பூக்களைப்போல

மலர்ச்சியோடும் காணப்படும் 


எழுத்துக்களால் வசீகரித்துக் கிடக்கும் அந்த

ஒற்றை முகநூலை 

தவிர்த்திட நினைத்து 


யார் யாரோ முகநூலிற்கெல்லாம் நண்பராகி

பதிவுகளுக்கு கருத்திட்டு வச்சாலும் 


மீண்டும் அந்த 

முகநூலை சுற்றித்தானே

என் மனமும் 

பம்பரமாய் சுழல்கிறது 


யான் என்ன செய்வேன்

அந்த முகநூலின் மீது

என் மனதிற்கு

ஏன்தான் இத்தனை ஈர்ப்போ...?


பிரபாஅன்பு

 25.02.2024

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.