வாழ்க்கை!!
வெளி நாட்டு வாழ்க்கை காலத்தை வீணடித்து ஜாலியாக வாழும் ஒரு வாழ்க்கை. இது வயது முதிர்ந்த கோலத்தில் வீடு போகும் போது தான் புரியும்.
ஆமாம், நரைத்த தலையுடன் நாடு திரும்பும் போது நமது வயதை ஒத்தவர்கள் நம்மை விட மிகவும் உயரத்தில் இருப்பார்கள். நமக்கு வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி கட்டிய வீடு மட்டுமே நோயுடன் மிஞ்சும். அந்த வீடும் கொஞ்ச காலத்தில் மகளுக்கு சீதனமாக கொடுத்து விட்டு கிராமத்தில் காடு வெட்டி பயிர் பச்சை செய்து வாழும் போதுதான் வெளி நாட்டு வாழ்க்கையின் கோலம் புரியும்.
இதைவிட உள் நாட்டில் ஆடம்பரம் இல்லாமல் நேர்மையாக நம்மால் படிப்படியாக முடிந்த தொழிலை நம்பிக்கையுடன் செய்து கொண்டு வரும் போது நேர்மை நம்பிக்கை இருந்தால், ஒரு கட்டத்தில் ஒரு முன்னேற்றகரமான வெளிச்சம் தெரியும் அதுதான் உடல் உழைப்பு தரும் நிரந்தர வெற்றி.
இருந்தும் படிப்பு ஏறவில்லை, ஒரு தொழில் செய்ய முதல் ,இடம் வசதி வாய்ப்புகள் இல்லை என்ற ஒரு நிலை இருந்து ,வெளி நாட்டுக்குத் தான் போக வேண்டும் என்றால், 18 இருபது வயதுக்குள் வந்து ஒரு ஐந்து ஆறு ஆண்டுகள் உழைத்து கொண்டு வீடு திரும்பினால், நீங்கள் வெற்றி பெற்றவர்கள்.
மேலும், வெளிநாட்டு ஜாலியான வாழ்க்கையில் மோகம் கொண்டு பத்து பதினைந்து ஆண்டுகள் வெளி நாடுதான் கெதி என்று இருந்தால் உங்கள் இறுதிக் கால வாழ்க்கை தோல்வியில் முடிந்து நாசமாய் போய் இருப்பதை அன்று உணர்வீர்கள். பணம் கைக்கு வர வர இன்னும் ஒரு வருடம் இன்னும் ஒரு வருடம் என மனம் தூண்டும் இது உனது தோல்விக்கு மனம் போடும் ஒரு கணக்கு என்பதை உணர்ந்து நேர காலத்தோடு வீடு போய் சேருங்கள்.
ஐனி,
கிண்ணியன்,
கருத்துகள் இல்லை