வேப்பமரத்தடி... !!
கரவெட்டி பகுதியில் சாமியன் அரசடி வைரவர் கோவில், அதன் அருகில் பரந்து விரிந்து நிற்கும் நூறு ஆண்டை கடந்த வேப்பமரம், கோவிலை சூழவுள்ள வீதி, இந்த இடங்கள் எல்லாம் பல நூறு இளைஞர்களின் கதைகளைக் கேட்டுக் கேட்டு அழுதிருக்கும், சிரித்திருக்கும், மகிழ்ந்திருக்கும்,
பல மாணவர்கள் விவாதிக்கும் களமாக இருந்திருக்கும், பல இளைஞர்களை மிடுக்குடன் உருவாக்கிய களம். பொதுவாகச் சொன்னால் இளைஞர் சாம்ராஜ்யம் அங்கே மேலோங்கி நின்றது, குறைந்தது தினமும் ஐந்து, ஆறு, வயது பாலகனில் இருந்து சிறுவர், பதின்மவயதினர், இளந்தாரிகள், நாற்பது வயதைக் கடந்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கூடும் இடம் அது!
70-80 களில் , இந்த வேப்பமரத்தை அண்டிய பகுதி விளையாட்டு மைதனாமாகவும் இயற்கையை ரசித்து காற்று வாங்குமிடமாகவும் அரட்டை இடமாகவும் நாட்டு அரசியலை தீர்மானிக்குமிடமாகவும் நேரத்துக்கு நேரம் இந்த இடத்தின் காட்சி மாறிக் கொண்டிருக்கும்
இந்த சாமியன் அரசடி வேப்பமர சூழல் 70 - 80 களில் எப்படி இருந்தது என்று எண்ணத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு ஓவியமாக்க பட்டிருந்தது அது தான் இந்தப் படம்.
இன்று அது எப்படி இருக்கிறதோ, எப்படி உணர்கிறதோ, தன் சிறகுக்குள் இருந்த குஞ்சுகள் எங்கோ பறந்து விட்டதாக அந்தரிக்கிறதோ.. நான் அறியேன்...
சின்னக்குட்டி மிதுன் - லண்டன்
கருத்துகள் இல்லை