பழமையான சிறையில்காதலர் தினத்திற்காக சிறப்பு ஏற்பாடு!

 


இங்கிலாந்தில் அமைந்துள்ள மிக பழைமையான சிறைச்சாலை காதலர் தினத்தில் காதலர்களுக்கு மிகவும் வித்தியாசமான அனுபவத்தை வழங்க தயாராகி வருகிறது.


காதலர் தினமான இன்று (14) காதலர்கள் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிறைக்கு சென்று உணவு சாப்பிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


காதலர்கள் சக ஜோடியுடன் பழைமையான இந்த சிறையில் தம்மை அடைத்து கொண்டு உள்ளே இருந்தவாறு தாம் விரும்பிய உணவுகளை வரவழைத்து உண்ண முடியும்.


காதலர்கள் வழக்கமான சிறை உணவை மிக சிறப்பான உணவுகளை பெற்றுக்கொள்ளலாம்.


இந்த பழமையான சிறையில் உணவு உண்பதற்காக 215 அமெரிக்க டொலர்கள் அறவிப்படுகிறது.


இதனை தவிர 900 ஆண்டுகள் பழமையான The Norman Crypt தேவாலய வளாகத்திலும் இரவு உணவுக்கு செல்லலாம். இதற்கான கட்டணம் 229 டொலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.