மூன்று சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம்!

 


சென்னை நீலாங்கரை அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் பாபு என்பவர் (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ``என்னுடைய மகள் உட்பட 7 வயது முதல் 10 வயதுடைய மூன்று சிறுமிகள் அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கின்றனர்." எனக் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் பொலிஸார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்திவந்தனர். விசாரணையில் சிறுமிகளை அழைத்துச் சென்றது 4-ம் வகுப்பு மாணவன் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அதனால் அந்த மாணவனிடம் பொலிஸார் விசாரணை நடத்தி, சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தவரின் பின்னணி குறித்த தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.


இது குறித்து நீலாங்கரை அனைத்து மகளிர் பொலிஸார் கூறுகையில், ``எங்களிடம் புகாரளித்த பாபுவின் மகள், கடந்த சில தினங்களாக சோர்வுடன் காணப்பட்டிருக்கிறார். அதனால் அவரிடம் பாபுவின் குடும்பத்தினர் விசாரித்தனர். விசாரணையில், `நானும் என்னுடைய தோழிகளும் கடந்த 30-ம் திகதி விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது 4-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர், குறிப்பிட்ட அடுக்குமாடிக்கு வந்தால் சாக்லேட் தருவதாகக் கூறி எங்களை அழைத்துச் சென்றார். அதை நம்பி நாங்களும் அங்கு சென்றோம். அப்போது எங்களுக்கு சாக்லேட்களை ஒருவர் கொடுத்தார்.


பின்னர் எங்களை அடுக்குமாடிக் குடியிருப்பின் மொட்டை மாடிக்கு அந்த நபர் அழைத்துச் சென்றார். அங்கு யாருமில்லை. அதனால், எங்களிடம் அந்த நபர் தவறாக நடந்து கொண்டார். அதோடு இந்தச் சம்பவத்தை வெளியில் சொல்லக் கூடாது எனவும் அந்த நபர் மிரட்டினார். அதனால் கடந்த 30-ம் திகதி நடந்த இந்தச் சம்பவத்தை வெளியில் சொல்லவில்லை. ஆனால் உடல் சோர்வு காரணமாக வீட்டில் சொல்லிவிட்டேன்' என்று தெரிவித்திருக்கிறார். இதையடுத்து பாபுவின் மகளிடம் நாங்களும் தனியாக விசாரித்தோம். அவர் அளித்த தகவல் மற்றும் அவர் அடையாளம் காட்டிய மாணவனிடம் விசாரணை நடத்தினோம். அப்போது அந்த மாணவன், அந்த மர்ம நபர் குறித்த தகவல்களைத் தெரிவித்தார்.


 இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் தரப்பில் பேசியவர்கள், ``கடந்த 30-ம் திகதி நடந்த இந்தக் கொடூர சம்பவம் குறித்து நீலாங்கரை அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் புகாரளிக்கச் சென்றோம். ஆனால் அங்கிருந்த பொலிஸார் மெத்தனமாகச் செயல்பட்டனர். இதையடுத்து உயரதிகாரிகளின் கவனத்துக்கு இந்த தகவலைக் கொண்டு சென்ற பிறகே, வழக்கு பதிவுசெய்திருக்கிறார்கள்" என்றனர்.


சாக்லேட் கொடுத்து மூன்று சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.