விமான டிக்கெட்., Air India நிறுவனம் சிறப்பு சலுகை!


டாடா சன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா (Air India) நிறுவனம் தனது பயணிகளுக்கு புதிய சலுகையை வழங்கியுள்ளது.


அதன் நெட்வொர்க்கில் வெள்ளிக்கிழமை 'Namaste World Sale' என்ற சலுகையை அறிவித்தது.


இந்த சலுகை திங்கள்கிழமை (பிப்ரவரி 5) வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Economy Class-இல், உள்நாட்டு வழித்தடங்களில் ரூ.1799க்கும், சர்வதேச இடங்களுக்கு ரூ.3,899க்கும் பயணிக்கலாம்.


உள்நாட்டு வழித்தடங்களில் Economy Class Ticket விலை ரூ.10,899 முதல் தொடங்குகிறது.


குறைந்த விலையில் சொகுசு பயண வாய்ப்பை வழங்குவதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்த சிறப்பு சலுகை இன்று (பிப்ரவரி 2) முதல் செப்டம்பர் 30 வரை தொடரும்.


முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வரையறுக்கப்பட்ட சலுகை கிடைக்கும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.


இந்தச் சலுகையின் கீழ் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு booking கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது.


அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், வளைகுடா, மத்திய கிழக்கு, ஆசியா பசிபிக் மற்றும் தெற்காசிய பகுதிகளுக்கு பயணிக்கும் விமானப் பயணிகளுக்கு இந்தச் சலுகை பொருந்தும்.


புலம்பெயர்ந்தோர் அல்லாத விசாக்களுக்கு கட்டணம் பலமடங்கு உயர்வு., ஏப்ரல் 1 முதல் அமுல்

சுவாரஸ்யமான Economy Class டிக்கெட் விலைகள்

இந்தியா - அமெரிக்கா: ரூ.31,956 (One-Way), ரூ.54,376 (Return)

இந்தியா - ஐரோப்பா - ரூ.22,283 (One-Way), ரூ.39,244 (Return)

இந்தியா - வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு - ரூ.7,714 (ஒரு வழி) - ரூ.13,547 (Return)

சிங்கப்பூர் - இந்தியா - ரூ.6,772 (One-Way), ரூ.13,552 (Return)

இந்தியா - மெல்போர்ன் - ரூ.29,441 (One-Way), ரூ.54,207 (Return)

இந்தியா - காத்மாண்டு - ரூ.3,899 (One-Way), ரூ.9600 (Return)கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.