நெடுங்கேணிப் பொலீசார் அராஜகம்!


வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் கோயில் சிவராத்திரி விழா ஒழுங்குபடுத்தல்களுக்கு சென்ற பூசகரும், நாளைய தேவைகளுக்காக எடுத்துச்செல்லப்பட்ட தோரணங்கள், வாழைமரங்கள், தண்ணீர்  பெளசர் போன்றன பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளன. அத்தோடு ஒழுங்குபடுத்தல்களுக்கு சென்றவர்களின் தேசிய அடையாள அட்டைகள், சாரதி அனுமதி பத்திரங்கள், தொலைபேசிகள் போன்றனவும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.