அரச வங்கிகளை தனியார் மயப்படுத்தத்திட்டம்!!


 50 மில்லியன் இலாபம் ஈட்டும் அரச வங்கிகளை தனியார் மயப்படுத்தத்திட்டம்.. ஜேவிபி அம்பலம்.


இலங்கையில் வங்கிகளை மறுசீரமைப்பு என்ற போர்வையில் இலாபம் ஈட்டுகின்ற இரு அரச வங்கிக்ளை தனியாருக்கு விற்பதற்கான முயற்சிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் விடுதலைப் முன்னனியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.


யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போதைய அரசாங்கம் நாட்டின் பெருமதிமிக்க வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகின்ற நிலையில் சுமார் 50 ஆயிரம் மில்லியன் இலாபம் ஈட்டும் இரு அரச வங்கிகளை தனியார் மயப்படுத்தும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.


இலங்கையின் மொத்த வருமானமாக சுமார் 4 ஆயிரத்து 127 பில்லியானக் காணப்படுகின்ற நிலையில் மொத்த செலவாக சுமார் 6 ஆயிரத்து 978 பில்லியனாகக் காணப்படுகிறது.


வெளிநாடுகளில் இருந்து பெற்ற கடனுக்கான தவணை வட்டிப் பணமாக சுமார் 6 ஆயிரத்து 919 பில்லியன் செலுத்தப்பட வேண்டிய நிலையில் 2024 இவ் ஆண்டு எதிர்பார்க்கும் கடன் தொகையாக சுமார் 7 ஆயிரத்து 350 பில்லியனாகக் காணப்படுகிறது.


நாட்டை கொள்ளை அடித்தவர்கள் சூறையாடியவர்கள் தொடர்ந்தும் பாதுகாக்கப்படுகின்ற நிலையில் பினைமுறி மோசடியில் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கியுள்ளனர்.


இவரை ஜனாதிபதியாகியவர்கள் வேறு யாரும் அல்ல பினைமுறி மோசடிக்காரர்களை சிறையில் அடைக்கப் போகிறோம் என ஆட்சிக்கு வந்த ராஜபக்சவினரே ஜனாதிபதியாக்கினர்.


நாட்டில் இடம்பெற்ற பாரிய நாதி மோசடிகளான சுமார் 1560 கோடி ரூபா சீனி மோசடி மற்றும் சுமார் 1100 கோடி ரூபா பிணை முறி மோசடி என்பவற்றை குறிப்பிட முடியும்.


 அப்பாவி மக்களின் வரிப்பணங்களை சூறையாடிய குறித்த இரண்டு மோசடிகளின் சொந்தக்காரர்கள் நாட்டில் சுதந்திரமாகச் செயல்பட்டு கொண்டிருக்கின்ற நிலையில் அப்பாவி மக்கள் பட்டினியில் தொடர்ந்தும் வாடிக் கொண்டிருக்கின்றனர். 


அரசாங்கத்தின் இத் தகைய செயற்பாடானது

 மக்களை அதல பாதாளத்துக்கு விட்டுச் செல்லும் செயற்பாடாக காணப்படுகின்ற நிலையில் மக்கள் தேர்தல் ஒன்றின் மூலமே இவற்றிற்கு தகுந்த பாடத்தை கற்பிக்க வேண்டும்.


அதற்காக மக்கள் தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்கின்ற நிலையில் தொடர்ச்சியாக மக்களின் ஆதரவு அலை தேசிய மக்கள் சக்திக்கு அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது.


ஆகவே திருடர்கள் அற்ற நாட்டை காட்டி எழுப்புவதற்கு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் திருட்டுகளில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.