செல்வ செழிப்புடன் வாழ மகாலட்சுமி வழிபாடு!

 


ஒரு மனிதனுக்கு கிடைக்கக் கூடிய மரியாதை அந்தஸ்து எல்லாம் அவர்களுடைய பதவி பணம் இவற்றை பொறுத்து தான் தீர்மானிக்கப்படுகிறது. குணத்தை வைத்து நடத்தை வைத்து யாரும் ஒருவரை மதிப்பதில்லை. இது தவறு என்றாலும் இன்றைய காலக்கட்டம் அப்படித் தான் சொல்கிறது. நம்மிடம் பணம் இல்லை வசதி வாய்ப்புகள் இல்லை என்றால் நம் அருகில் ஒருவரும் இருப்பதில்லை இது யாரும் மறுக்க முடியாத உண்மை. ஒரு சிலர் நல்ல நிலைமையில் வாழ்ந்திருப்பார்கள்.

 பெயர், பொருள், செல்வம் என ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்திருப்பார்கள். அப்போது அவர்களை சுற்றி எப்போதும் ஒரு பெரும் கூட்டம் இருந்திருக்கும். திடீரென அவர்கள் நிலைமை சரிந்து ஒன்றும் இல்லாமல் ஆகி இருப்பார்கள். உடனிருந்து அவர்களின் வசதியை அனுபவித்தவர்கள் கூட விலகி சென்று இருப்பார்கள்.

 அப்போது அவர்களின் நிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். நம்முடைய செல்வ நிலை வசதி வாய்ப்புகள் பெருகி நல்ல நிலையில் வாழவும் இழந்தவை எல்லாம் திரும்ப கிடைக்கவும் மகாலட்சுமி தாயாரை இந்த முறையில் மந்திரம் வழிபாடு செய்தால் அனைத்தும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன வழிபாடு எப்படி செய்ய வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம். 


செல்வ செழிப்பான வாழ்வை தரும் மகாலட்சுமி மந்திரம் 

இந்த மந்திர வழிபாடு செய்ய முதலில் 108 மல்லிகை புஷ்பங்களை வாங்கிக் கொள்ளுங்கள். இதை தவிர்த்து தொடுத்த மல்லிகை மலரையும் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு தாம்பாளத் தட்டில் மகாலட்சுமி தாயாரின் படம் அல்லது விக்கிரகம் வைத்து விடுங்கள்.

 அன்னைக்கு மல்லிப்பூவால் மாலை போடுங்கள். அடுத்து வெற்றிலை, பாக்கு, பழம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றை அன்னைக்கு முன்பாக வைத்து விடுங்கள். அன்னையின் படத்திற்கு முன்பாக ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்றி தயாராக வைத்து விடுங்கள். முதலில் விநாயகரை மனதார வேண்டிக் கொண்டு இந்த தீபத்தை ஏற்றுங்கள். அடுத்து ஒவ்வொரு மல்லிகை மலரையும் கையில் எடுத்துக் கொண்டு வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் நட்சத்திரத்தையும் மனதால் நினைத்து கொண்டு இந்த மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.


 ஓம் மகாலட்சுமி நமஹ 

ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நமக 

ஓம் ஜெயலட்சுமி நமக 

இன்று மூன்று மந்திரத்தையும் ஒரே மந்திரமாக சொல்லி ஒரு மல்லிகை மலரை போடுங்கள்.

 இதே போல 108 முறை இந்த மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்த பிறகு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு நெய்வேத்தியத்தை அனைவரும் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த முறையில் 90 நாட்கள மகாலட்சுமி தாயாரை வழிபடும் போது வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் நிலைமையும் மாறி நல்ல முன்னேற்றம் அடைவார்கள் என்பதோடு தாயாரின் அனுகிரகமும் கிடைக்கும். இதனால் வீட்டில் செல்வ வளம் பெருகும் வீட்டில் இருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள், சமூகத்தில் அந்தஸ்து உயரக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். இதையும் படிக்கலாமே: சுக்கிர வார பிரதோஷ வழிபாடு இந்த பூஜை முறையை தொடர்ந்து செய்யும் போது நம்முடைய வாழ்க்கையின் நிலைமையே மாறி விடும் என்று சொல்லப்படுகிறது. செல்வத்தை வாரி வழங்கக் கூடிய அன்னையை இந்த முறையில் வழிபட்டு நம்முடைய வாழ்க்கையில் இழந்தவை அனைத்தையும் பெற்று நல்ல முறையில் வாழலாம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.