கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வ்வு!


தேசிய கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் கூற்றுப்படி, கட்டுமானப் பொருட்களின் விலை இதுவரை 300% க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.


 டொலருடன் ஒப்பிடும் போது ரூபாவின் பெறுமதி தற்போது நிலையான நிலையை எட்டியுள்ள போதிலும் அதன் பயனை நுகர்வோர் பெறவில்லை என அதன் செயலாளர் சுபுன் அபேசேகர தெரிவித்துள்ளார்.


 இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி காரணமாக, டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியுடன் நாட்டின் பல துறைகள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன.


 இவ்வாறானதொரு சூழ்நிலையில், பொருட்களின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளால் கட்டுமானத் துறை பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது.


 கட்டுமானத் துறையில் பணிபுரியும் பலர் வேலை இல்லாமல் மிகவும் நிர்க்கதியாகியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.