பாடசாலை விளையாட்டு போட்டிகள் இடைநிறுத்தம்!

 


பாடசாலை விளையாட்டு போட்டிகள் இடைநிறுத்தம் --கல்வி அமைச்சு வெளியிட்ட சுற்றுநிருபம்


இலங்கையில் நிலவும் கடும் வெப்பத் துடனான காலநிலை காரணமாக பாட சாலை இல்ல விளையாட்டுப் போட்டி கள் மற்றும் ஏனைய வெளிப்புற நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


விசேட சுற்றறிக்கை மூலம் கடந்த திங்கட்கிழமை நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இந்த அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


கல்வி அமைச்சின் விசேட சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதா வது, தற்போது நாட்டில் நிலவும் கடும் வெப்பத்துடனான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரையில் காணப்படலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


எனவே குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய சுகாதார அபாயங்களைக் கருத்தில் கொண்டே, இல்ல விளையாட்டுப் போட்டி களையும் வெளிப்புறச் செயற்பாடுகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அனைத்து அரச பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதன்படி, 2024ஆம் ஆண்டின் முதல் கல்விக் காலத்தின் இரண்டாம் அல்லது மூன்றாம் கட்டம், அதாவது ஏப்ரல் 24. 2024க்குப் பிறகு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பிற வெளிப்புற நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது.


மேலும் இந்தக் காலப்பகுதியில் பாட சாலை மாணவர்களின் உடல் நிலை குறித்து அவதானத்துடன் செயற்பாடுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.