பாடப்புத்தகங்கள் - சீருடைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு!


அனைத்து அரச பாடசாலை மாணவர்களுக்கும் 2024ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


இதன்படி, சகல பாடசாலைகளுக்குமான பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வலய கல்வி அலுவலகங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


இதற்கமைய, இதுவரையில் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் கிடைக்கப்பெறாத பாடசாலைகள் இருப்பின் உடனடியாக அறிவிக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


இதன்படி பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் அல்லது தொலைநகல் அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


பாட புத்தகங்களுக்கு –


தொலைபேசி எண்கள் - 0112784815 / 0112785306

தொலைநகல் - 0112784815

மின்னஞ்சல் முகவரி - epddistribution2024@gmail.com


சீருடைக்கு -


தொலைபேசி இலக்கம் - 0112785573

தொலைநகல் - 0112785573

மின்னஞ்சல் முகவரி - schoolsupplymoe@gmail.com

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.