பேருந்து தரிப்பிடத்தில்துர் நாற்றம்!


பேருந்து தரிப்பிடத்தில் உள்ள கழிவறை நீர் கசிவால் ஹட்டன் தனியார் பேருந்து தரிபிடம் முழுவதும் துர் நாற்றம் வீசுவதாக பயணிகள் புகார்.


மஸ்கெலியா  விசேட செ.தி.பெருமாள்.


ஹட்டன் நகர சபைக்கு உரித்தான பேருந்து தரிப்பிடத்தில் உள்ள பொது கழிப்பறை பகுதியில் கழிவு நீர் கசிந்து வழிந்து கொண்டு உள்ளது.

இதனால் தனியார் பேருந்து தரிப்பிட பகுதியில் பாரிய அளவில் துர்நாற்றம் வீசுகிறது.

இந்த தரிப்பிட பகுதியில் தனியார் பேருந்துகள் அதன் சாரதிகள், நடத்துனர்கள், பயனிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பாதசாரிகள் என பல்வேறு மக்கள் கூடும் பகுதி .

இந்த கழிவறை மூலம் நாளாந்தம் பல ஆயிரம் ரூபாய் ஹட்டன் நகர சபைக்கு வருமானம் வந்த வண்ணம் உள்ளது.

இருந்த போதும் இந்த கழிவறை கழிவுநீர் கசிவை கட்டுபடுத்த முடியாத நிலையில் ஹட்டன் நகர சபை உள்ளது.

அதன் செயலாளர் மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் உடன் கவணம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.