நினைவாகிப்போன நேசத்திற்கு..!

 


நான் நேசிப்பவரிடம்

மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்வேன்

நீ என்னை நேசிக்கிறாயா என்று


அது ஒரு பெருநேசத்தின்

ஆதங்கம் என்பதை

நமது நேசத்துக்குரியோர் அறிந்திட

நியாயமில்லைத்தான்


பிரிவுகளால் மனம் வேகி வெந்துகொண்டிருக்கும்போது

நினைவாகிப்போன நேசத்திற்கு

ஒரு ஊமையைப்போல்தான்

அழமுடிகிறது


ஒரு உறவை 

இழக்க விரும்பாத நாம்

அந்த முடிவை நெருங்கிய 

பின்னர்தான்

 

இதற்காகவா அருகிருந்து 

இவளவு ஏங்கினோம் 

இத்தனை துயரையும் சுமந்தோமென வருந்துகிறோம்


நாம் 

அவர்களிடம் எதிர்பார்த்த

அத்தனை நேசங்களையும்

அத்தனை ஆறுதல்களையும்

அத்தனை அரவணைப்புக்களையும்


யாரோ ஒருவருக்கு பரிசளித்துவிட்டுத்தான் 

மன்னிப்புக்களை சுமந்தபடி

திரும்பி வருகிறார்கள்


முட்கிரீடத்தை எம் இதயத்தில் 

மீண்டும் 

அறைந்துவிட்டு செல்வதற்காய்....


-பிரபா அன்பு-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.