மிலேச்சத்தனமாக கைது செய்யப்பட்ட 08 தமிழர்களும் மீன்டும் சிறைச்சாலைக்கு!

 


வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் நேற்றைய தினம் சிவராத்திரி வழிபாடுகளின் போது பொலிஸாரினால் மிலேச்சத்தனமாக கைது செய்யப்பட்ட 08 தமிழர்களும் இன்றைய தினம் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவர்களுக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.


பொலிஸாரின் விசாரணைகள் முடியவில்லை என்பதாலும், பொலிஸாரினால் தாக்கப்பட்டு அவர்கள் காயமடைந்துள்ளதாலும் வழக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு திகதியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட 08 பேரும் தற்போது சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.