தைரியமாக எதிர்த்தால் இருக்கவே இருக்கிறது “தேசத்துரோகி” பட்டம்!


முதலாவது படத்தில் உள்ளவர்கள் தள்ளாத முதுமை காரணமாக தங்கள் இயலாமையை மக்களிடம் தன்மையாக கூறி தங்கள் பசியினைப் போக்கிக் கொள்கின்றனர்.


இரண்டாவது நிழற்படத்தில் உள்ளவர் தன்னிடம் உள்ள கலையினை வைத்து படத்தினை தீட்டி ஏதாவது ஒரு வகையில் உழைத்து வாழ வேண்டும் என்று நினைக்கிறார்.


இப்படிப்பட்டவர்களை பார்த்தும் திருந்தாத இந்த “Uncles”கூட்டம் ஒரு போலியான பெண்ணைக் கொண்டுவந்து பிழைப்பு நடத்த திட்டமிட்டு செயற்பட்டுவருகின்றனர்.


ஏன் உங்களால் உழைத்து வாழவே முடியாதா? 


மற்றவர் பணத்திற்கு ஏன் இப்படி அலைகிறீர்கள்? 


எத்தனையோ பெற்றோர் தமது பிள்ளைகளை மாவீர்களாக நாட்டிற்காக கொடுத்துவிட்டும், போர் சூழல் காரணமாக இழந்துவிட்டும் தங்கள் முதுமைக் காலத்தில் ஆதரிக்க யாருமின்றி உணவிற்காக தவித்து நாட்டில் வாழ்கின்றனர்.


எத்தனையோ பழைய போராளிகள் தங்கள் அங்கங்களை இழந்து வேலைக்கு செல்ல முடியாத நிலையில் சொல்ல முடியாத வேதனையுடன் வறுமையில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.


புலம்பெயர்ந்து வாழும் நாம் இங்கு என்ன செய்கிறோம்?

“Uncles” பணம் சேர்த்தால் கேள்வியே கேட்காது கொடுத்து மகிழ்கிறோம்!


அந்தப் பணத்தினை பயன்படுத்தி நமது நாட்டில் வாழும் மக்களின் துயர் துடைக்காது இந்த “Uncles” என்ன செய்தனர்?


தங்கள் குடும்பங்களைத் தாங்களே வளப்படுத்திக் கொண்டனர். தங்கள் பிள்ளைகளையும் தம்மைப்போல வளர்த்த காரணத்தால், ஆடம்பர வாழ்க்கையைத் தொடர போலிப் பெண்ணையும் உருவாக்கியுள்ளனர்.


தகுதியே இல்லாதவர்கள் பதவிகளை வகித்தனர். இப்போது தங்கள் வாரிசுகளை அந்தப்பதவியில் அமர்த்த அரும்பாடுபட்டுவருகின்றனர்.


நாட்டில் உள்ளவர்கள் எப்படிப்போனால் இந்த “Uncles”க்கு என்ன? கேட்டால் நாங்களா போராட சொன்னோம் என்று கேள்வி கேட்பார்கள்.


மக்களும் உங்களை நம்பி நிதி தரமாட்டோம் என்று தைரியமாக சொல்லமாட்டார்கள்.


காரணம் “அகவணக்கத்துடன்” துவங்கும் விழாவின் நிறைவில் நடைபெறும் “மதுவணக்கத்தில்” இணைந்து கொள்ள முடியாதே!


அப்படியும் தைரியமாக எதிர்த்தால் இருக்கவே இருக்கிறது “தேசத்துரோகி” பட்டம்!


#bewareofuncles


12.03.2024

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.