வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!📸

 


வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்ட 8 பேருக்கும் 19.03.2024 வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.


தொல்பொருளை சேதப்படுத்தியதாக அவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.


சில காலங்களின் முன்னர் வெடுக்குநாறிமலையிலிருந்த ஆலய விக்கிரகங்கள் அனைத்தும் உடைத்து எறியப்பட்டிருந்தது. அதே போல குருந்தூர்மலையிலிருந்த சூலமும் உடைத்து எறியப்பட்டு அங்கு விகாரையும் கட்டப்பட்டிருக்கிறது.


அந்தச் செயற்பாடுகளில் ஈடுபட்ட யாரும் கைது செய்யப்படவில்லை, மாறாக சிவராத்திரி தின நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டிருக்கிறது என்பது இந்த அரசின் இனவாதப் போக்கையை தொடர்ந்தும் காட்டிக்கொண்டிருக்கிறது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.