இந்திய தூதரகம் முன் உணவு தவிர்ப்பு போராட்டம்.. மீனவ சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு.!


இந்திய அத்துமீறிய மீன்பிடியை கட்டுப்படுத்துமாறு கோரி யாழ் இந்திய துணை தூதரகம் முன் மீனவ சங்கங்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன.


நேற்றைய தினம் யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது யாழ் மாவட்ட கடத்தொழிலாளர் கிராமிய அமைப்புகளின் தலைவர் செல்லத்துரை நற்குணம் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில் எமது யாழ் மாவட்ட கடற்பரப்பில் இந்திய ஆத்துமீறிய மீன்பிடியாளர்களின் வருகை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.


அவர்கள் எமது வாழ்வாதாரத்தையும்  தொழிலையும்  தொடர்ச்சியாக அழித்து வரும் நிலையில் இலங்கை அரசாங்கத்திடமும் இந்திய அரசாங்கத்திடமும் எமது ஆதங்கங்களை வெளிப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.


அண்மையில் இந்திய சட்டவிரோத மீன்பிடியாளர்களை கட்டுப்படுத்துமாறு கோரி இலங்கை கடல் எல்லையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம் யாழ் இந்திய துணை தூதரகத்திடம்  மஜகர் கையளித்தோம் பயன் ஏதும் ஏற்படவில்லை.


இவ்வாறான நிலையில் எதிர்வரும் 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்திற்கு முன்னாள் தொடர்ச்சியான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.


எமது போராட்டத்திற்கு ஏனைய மாவட்டங்களைச் சார்ந்த சங்கங்கள் சமாசங்கள்  மற்றும் சம்மேளனங்கள் தமது ஆதரவினை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.75

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.