வடமேல் மாகாண ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் தோற்றிய ஒரு பட்டதாரியின் உள்ளக் குமுறல்!


இன்றைய தினம் இடம் பெற்ற வடமேல் மாகாண பட்டதாரிகளுக்கான ஆசிரியர் போட்டி பரீட்சையும் பட்டதாரிகளின் சோகக் கதைகளும்


இன்று வடமேல் மாகாணத்தில் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் உள்வாங்குவதற்கான பரீட்சை பல இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் சுமார் ஐந்து வருடங்களின் பின்னர இடம் பெற்றுள்ளது.


ஆனால் பரீட்சைக்கு தோற்றிய பெரும்பாலான பட்டதாரிகள் ஏமாற்றத்துடனே வீடு திரும்பினார் காரணம் இன்று நடைபெற்ற பரீட்சை ஒரு விசித்திரமான பரீட்சையாகும்.


01. பொது உளச்சார்பு (நுண்ணறிவு) Aptitude test


50 வினாக்கள் 100 புள்ளிகள் வழங்கப்படும் ஏதோ பரீட்சைக்கு வருகை தந்த (படித்தோரில்) அரைவாசி பேராவது அதில் 40 புள்ளிகளுக்கு மேல் பெறுவார்கள் என்று நம்பிக்கை கொள்ளலாம்


02. பொது அறிவு (General knowledge test) 

இந்த பரீட்சை தான் கொஞ்சம் வித்தியாசமானது ஏன் விசித்திரமானதும் கூட, 


பொது அறிவு பரீட்சை என்று பெயரை வைத்துவிட்டு பொது அறிவே இல்லாமல் பரீட்சை வினாத்தாள் எடுத்திருக்கிறார்கள்.


பரீட்சைக்கு பெயர் பொது அறிவு பரீட்சை ஆனால் உள்ளே நான்கு பிரிவுகள்

01. இலங்கை வரலாற்று தகவல்கள் தொடர்பானது (20 வினாக்கள்)


2. நடப்பு விவகாரங்கள் மற்றும் விளையாட்டு தகவல்கள் தொடர்பானது (10 வினாக்கள்)


3. இலக்கியம் மதம் மற்றும் கலாச்சார தகவல்கள் 

(10 வினாக்கள்)


4. சுற்றுச்சூழல் அறிவியல் சர்வதேச தகவல்கள் தொடர்பானது (10 வினாக்கள்)


இந்த நான்கு பிரிவுகளில் முதல் பிரிவில் இலங்கை வரலாறு தொடர்பான வினாக்கள்

 தற்பொழுது பாடசாலையில் கற்பிக்கின்ற வரலாறு பாட ஆசிரியரால் கூட இருபதில் பத்து வினாக்களுக்கு கூட விடை அளிக்க முடியாது


நடப்பு விவகாரங்கள் மற்றும் விளையாட்டு தகவல்கள்


ஏதோ SLÀS பரீட்சைக்கு கேள்வி கேட்பது போல் கேட்டிருந்தார்கள். விளையாட்டு வினாக்களுக்கு விடை யளிப்பதற்கு சூரியனின் லோஷன் அண்ணாவைத்தான் கொண்டு வர வேண்டும்.


மூன்றாவது இலக்கியம் மற்றும் மதம் தொடர்பான வினாக்களில் நாம் கற்ற காலங்களிலோ அல்லது பல்கலைக்கழகங்களிலோ வாழ்க்கையிலே கேள்விப்படாத பல இலக்கியங்கள் தொடர்பான வினாக்கள்


இறுதியாக சுற்றுச்சூழல் மற்றும் சர்வதேச தொடர்பான தகவல்கள் இப்படியெல்லாம் கேள்வி எடுக்க முடியும் என்று இன்று தான் தெரிந்து கொண்டேன் நான் மாத்திரம் அல்ல இன்று பரீட்சைக்கு வருகை தந்த பெரும்பாலானவர்களின் மனநிலை இதுதான்.


உண்மையிலேயே வடமேல் மாகாண சபையில் ஒரு ஆசிரியராக வருவதற்கு ஒரு பட்டதாரி இடம் என்னதான் தகுதி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை.


சாதாரண தரம் சித்தி அடைந்து உயர்தரம் சித்தி அடைந்து, பல்கலைக்கழகம் சென்ற

 பட்டம் (Degree)மற்றும் 

விசேட பட்டங்கள்(Special degree)

 அதிலும் விசேட பட்டங்களிலும் விசேட சித்திகள்

 (1st class, 2nd class upper)


இப்படி சகல தகமைகளும் இருந்தும் யாரோ ஒருவரால் வடிவமைக்கப்படுகின்ற இரண்டு மணித்தியால பரீட்சையை எதிர்பார்க்கின்றனர். 

(நான்கைந்து கருத்தரங்குகளுக்கு சென்று விடிய விடிய படித்தவர்களின் நிலைமை தான் கவலைக்கிடம்)


எங்கு சென்று யாரிடம் சொல்வது இலங்கையின் கல்வி முறைமையினை. 

பரீட்சையில் வெற்றி பெறுபவர்களுக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள்.

இன்ஷா அல்லாஹ் மீண்டும் 5 வருடங்களுக்கு பின்னர் சந்திப்போம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.