தேசியமட்ட உதைபந்தாட்டத்தில் மகாஜனா 18 வயதுப் பெண்கள் சாம்பியன்.!
இலவ்கை பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேளனத்தால் 18 வயதுப் பெண்கள் அணிகளுக்கிடையில் தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டத்தில் மகாஜனா சாம்பியனாகியுள்ளது. இப்போட்டி சுகததாஸ விளையாட்டரங்கில் 09.03.2024 இன்று நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் களுத்துறை சென். ஜோன் கல்லூரி அணியை எதிர்கொண்ட மகாஜனா 3:0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியனாகியது.
முதலாவது பாதியாட்டத்தில் 1:0 என்ற கோல்கணக்கில் முன்னிலை வகித்த மகாஜனா, இரண்டாவது பாதியாட்டத்தில் மேலும் இரு கோல்களை பெற்று வெற்றியை உறுதிசெய்தது. தரணிகா 2 கோல்களையும் சஸ்மி 1 கோலையும் அணிக்காக பெற்றுக்கொடுத்தனர்.
கருத்துகள் இல்லை