இஸ்ரேலிய அரசு3400 குடியேற்றங்களுக்கு அனுமதி!
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள குடியேற்றங்களில் 3,400க்கும் அதிகமான வீடுகளை அமைக்கும் திட்டத்தை இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ளது.
இதில் 70 வீதத்துக்கும் அதிகமான வீடுகள் கிழக்கு ஜெரூசலத்தின் மாலே அதுமிம்மிலும் ஏஞ்சியவை பெத்லஹாம் தெற்கிலும் அமைக்கப்படவுள்ளன. மாலே அதுமிம்முக்கு அருகில் இரு வாரங்களுக்கு முன் நடத்தப்பட்ட பலஸ்தீன தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாகவே இந்த வீடுகள் அமைக்கப்படுவதாக அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கால பலஸ்தீன நாடு ஒன்றுக்கு இடையூறாக அமைக்கப்படும் இஸ்ரேலிய குடியேற்றங்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதாக பார்க்கப்படுகிறது.
1967 மத்திய கிழக்கு போரில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தில் சுமார் 160 குடியேற்ற வீட்டுத் திட்டங்களில் சுமார் 700,000 யூதர்கள் வாழ்கின்றனர்.
இந்நிலையில் இஸ்ரேலின் இந்த புதிய திட்டத்திற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் வெளியாகியுள்ளன.
கருத்துகள் இல்லை