சிறுத்தையின் சடலம் மீட்பு!

 


தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத்திலுள்ள வீடொன்றுக்கு அருகில் இன்று (08) உயிரிழந்த நிலையில் சிறுத்தையொன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.


தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத்திலுள்ள வீடொன்றுக்கு அருகில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்று கிடப்பதாக தலவாக்கலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சிறுத்தையை மீட்டதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர்.


உயிரிழந்த சிறுத்தையின் சடலம் மரண பரிசோதனைக்காக இரந்தனிகல வனவிலங்கு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நபரை நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஐர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.