சாந்தன் அண்ணாவின் உடல் பேளையினை தாங்கி வரவுள்ள ஊர்தி!
அன்புறவுகளே வணக்கம்
அண்ணன் #சாந்தன் அவர்களின் புகழுடல் தாங்கிய ஊர்தி பவனி
இன்று.(03.03.2024) ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு வவுனியா நகரத்தில் மக்களின் அஞ்சலியைத் தொடர்ந்து A9 வீதியூடாக பயணித்து (கனகராயன்குளம்,மாங்குளம்,முருகண்டி,கிளி நகரம் (11.00 மணி),பரந்தன்,பளை கொடிகாமம் ஊடாக வல்வெட்டித்துறை தீருவில்)
வல்வெட்டித்துறை தீருவிலை சென்றடையவுள்ளது...
அன்பானவர்களே..
எமக்காக தன்னுயிர் தந்த சாந்தன் அண்ணாவினை தகுந்த மலர் மாலை மரியாதையுடன் வழியனுப்பிவைப்போம்.. இது எமக்காக காலப்பணி.. எனவே அவர் வரும் வழியெங்கும் மலர்தூவி அஞ்சலிக்க அந்த நேரத்திற்கு வீதிக்கு வந்து அந்த உன்னத மனிதனுக்கு மலர்தூவி அஞ்சலியுங்கள்.. அணிஅணியாகத் திரளுங்கள்..
அவ் ஊர்தி வரும் சரியான நேரங்கள் அவ்வப்போது தரப்படும்..
நன்றி
சாந்தன் அண்ணா நினைவேந்தல் குழு
மற்றும் மக்கள்..
கருத்துகள் இல்லை