சாந்தன் உடலை ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளார் தங்கை!📸🎦


மறைந்த சாந்தனின் உடல் அவரின் சொந்த ஊரான உடுப்பிடியில் அமைந்துள்ள வீட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் சில நெகிழ்ச்சியான சம்பவங்கள் பதிவாகியிருந்தது.

சாந்தனின் உடலை வீட்டிற்கு கொண்டுவரும் போது அவரது உடன்பிறந்த சகோதரி ஆரத்தில் எடுத்தமை அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்திருந்தது.

“என் தெய்வம் வீட்டிற்கு வருகின்றது, யாரும் அழக் கூடாது“ என அவரது சகோதரி இதன்போது உருக்கத்துடன் கோரிக்கை விடுத்திருந்தார்

சாந்தன் உயிருடன் வந்தால் எப்படி வரவேற்க விரும்பியிருந்தாரோ அத்தகைய ஒரு வரவேற்பை சாந்தன் உடலுக்கு கொடுத்து தன்னை தேற்றுகிறார் தங்க
ை. 


அழுது ஓய்ந்துவிட முடியாத ஆறாதத் துயரம் இது.உயிரற்ற பூவுடலாய் தாயை அடைந்தார் சாந்தன் அண்ணன். 

"யாரும் அழ வேண்டாம். வாங்கோ என்ர குட்டி அண்ணா" எனப் பதிகம் பாடி, ஆரத்தி எடுத்து தன் அண்ணனின் பூவுடலை வரவேற்றார் தங்கை. 

திரண்டிருந்த சனத்தின் மனம் விம்மி வெடித்தது. 

இதுபோதும் - என் சந்ததி பல நூற்றாண்டுகளுக்கு "உங்கள்" சதி பேசும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.