40 குடும்பங்களுக்கு சொந்தமான 24 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது.!


வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி தெற்கு -தென்மயிலை (J240) கிராம சேவையாளர் பிரிவில் உள்ள தமது சொந்த காணியை 34 வருடங்களின் பின்னர் மக்கள் சென்று பார்வையிட்டனர். இந்த காணியானது வறுத்தலைவிளான் பிள்ளையார் கோயிலுக்கு செல்லும் வீதிக்கு அருகில் உள்ளதுடன் இங்கு 40 குடும்பங்களுக்கு சொந்தமான 24 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது.

இராணுவத்தினர் தமது உடமைகளை எடுத்து முடித்த நிலையில் இன்று மாலை 3 மணியளவில் கிராம சேவையாளரிடம் இராணுவத்தினர் காணியின் பொறுப்பினை கொடுத்தனர். இதையடுத்து மக்களை பார்வையிட அனுமதிக்கப்பட்டது. மேலும் தெல்லிப்பழை பிரதேச செயலரும் காணிக்கு வருகை நிலமைகளை அவதானித்திருந்தார்.

மக்களின் வீடுகள் ஓரளவு நல்ல நிலையில் இருக்கின்றன. அத்துடன் மக்களின் காணியில் இராணுவத்தினர் வாழை மரங்கள், பப்பாசி மரங்கள், மா மரங்கள், பூ மரங்களை நாட்டியுள்ளனர். 

சில வீடுகள் கிணறுகள் சேதமடைந்து இருந்தாலும் தமது வீடு காணி நீண்ட காலத்திற்கு பிறகு தமது கிடைத்தமை சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தனர். அத்துடன் வீடுகள் இல்லாதவர்களுக்கு அரசு மீள்குடியேற்றத்துக்கு வீட்டுத்திட்ட உதவிகளையும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.