.பூனை இல்லாத வீட்டில் எலிகள் சன்னதம்!

 


வவுனியா சிவன் ஆலய அராஜகம்.பூனை இல்லாத வீட்டில் எலிகள் சன்னதம்.. அகத்திக அடிகளார் கொதிப்பு.


வவுனியா வெடுக்கு நாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று பொலிசாரின் அடாவடித்தன செயற்பாடு பூனை இல்லாத வீட்டில் எளிகள் சன்னதம்மாடுவதாக தென் கையிலே ஆதீன குரு முதல்வர் அகத்திய அடிகள் தெரிவித்தார்.


நேற்று திங்கட்கிழமை நெல்லை ஆதீனத்துக்கு முன்பாக இடம்பெற்ற வவுனியா படுத்தினார் ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று வழிபாடுகளை நடாத்த விடாமல் பொலிசார் அராஜகத்தில் ஈடுபட்டமைக்கு கண்டனம் தெரிவித்து இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில் நீதிமன்ற கட்டளையை மதிக்காமல் செயற்படும் நாடாக இலங்கை காணப்படுவது அயல்நாடுகளுக்கு மட்டுமல்ல சர்வதேசம்வரை சென்றுள்ளது.


ஒரு நாட்டின் சுயாதீன நிறுவனமான நீதிமன்ற கட்டமைப்பை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் இலங்கை காவல்துறை செயல்படுவது மட்டுமல்லாமல் ஒரு சமூகத்தை பாதிக்கும் வகையில் தனது அதிகாரத்தை பயன்படுத்துகிறது.


வவுனியா வெடுக்கு நரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் பல நூறு ஆண்டுகளாக சிவத் தமிழ் பண்பாடுகளுடன் கூடிய வழிபாட்டு இடமாக காணப்பட்டு வந்தது.


ஆனால் அதனை சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடையாளமாக மாற்றுவதற்கு பொலிசாரம் தொல்பொருள் திணைக்களமும் அவர்களோடு சேர்ந்து வன இலாக்காவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


இவர்களது முயற்சியை நாங்கள் ஒற்றுமையாக முறியடிக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் உள்ள நிலையில் அயல் நாடான இந்தியாவும் குறித்த விடையம் தொடர்பில் தனது கரிசனையை செலுத்த வேண்டும்


ஆகவே இதனை நாங்கள் முறியடிக்க வேண்டுமானால் மண்ணுக்காகவும் சமயத்துக்காகவும் தொடர் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.