யாழ் போதனாவில் 6 லட்சத்து 32 ஆயிரம் பேர் சிகிச்சை!


யாழ் போதனாவில் 6 லட்சத்து 32 ஆயிரம் பேர் சிகிச்சை.. பிரதிப் பணிப்பாளர் யமுனானந்தா தகவல்.


யாழ் போதனா வைத்தியசாலையின் கிளினிக்கில் கடந்த வருட இறுதியில் மட்டும் சுமார் 6 லட்சத்து 32 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றதாக யாழ் போதனா வைத்திய சாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவித்தார்.


நேற்று வியாழக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் சுகாதாரத்துறை தொடர்பான விடையதானங்களில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேல தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தின் சனத் தொகை சுமார் 6 இலட்சத்து 27 ஆயிரம் பேராகக் காணப்படுகின்ற நிலையில் கடந்த வருட இறுதியில் மட்டும் யாழ் போதன வைத்தியசாலையின் கிளினிக்கில் 6 இலட்சத்து 32 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.


யாழ் போதனா வைத்திய சாலையின் கட்டட வளம் குறைவாக காணப்படுகின்ற நிலையிலும் பாரிய தொகையினர் சிகிச்சை பெற்றுள்ளனர்.


கண் சிகிச்சைக்காக ஒரு நாளில் மட்டும் சுமார் 300 பேர் வருகை தரும் நிலையில் போதனா வைத்தியசாலையின் பாவனைக்காக இடவசதி தேவைப்படுகிறது.


ஆகவே யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கட்டடத்தை 10 வருடங்கள் குத்தகைக்கு யாழ் போதனா வைத்தியசாலைக்கு வழங்கினால் இட நெருக்கடியை குறைத்துக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.