33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள்!

 


யாழ் மாவட்டத்தில் 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள்..அரச அதிபர் பிரதீபன்.


யாழ் மாவட்டத்தில் 33 பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் உள்ளதாக யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.


நேற்று வியாழக்கிழமை யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தில் சாவகச்சேரியில் 14 கடவைகளும் உடுவில் 03 தெல்லிப்பழை 06 நல்லூர் 07 மற்றும் யாழ்ப்பாணத்தில் 03 கடவைகளும் காணப்படுகிறது என்றார்.


இதன்போது குறிப்பிட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புகையிறத கடவைகள் அமைக்கும் வரை தற்காலிகமான பெல் லைற் அமைப்பது தொடர்பல் கவனம் செலுத்துவது நல்லது என தெரிவித்தார்.


இதன் போதும் பதில் அளித்த யாழ் புகாயிரத நிலைய அதிபர் ஒரு பெல் லைன் பொருத்துவதற்கு சுமார் 80 இலட்சம் ரூபா செலவாகும் என தெரிவித்ததுடன் மாற்றீடாக ஆளணியினரை பெற்றுக் கொடுத்தால் பாதுகாப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவித்தார்.


அரசாங்கத்தின் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு செயலணி மூலம் வடக்கு மாகாணத்துக்கு மட்டும் பிரத்தியோகமான ஆள அணியினரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் அதற்கான விடையதானங்களை தாருங்கள் அமைச்சரவையில் கலந்துரையாடி முடிவுகளை எடுப்பதாக தெரிவித்தார்.


குறித்த கலந்துரையாடலில் வட மாகாண ஆளுநர் பி எஸ் எம் சாள்ஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் செல்வராஜா கஜேந்திரன் அவைத்தலைவர் சி வி கே சிவஞானம் சாள்ஸ் வடமாகாண பிரதம செயலாளர் லக்ஷ்மன் இளங்கோவன் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள் பிரதேச செயலாளர்கள் பொது அமைப்புக்களை பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.