வலி!!


 என்னோட பெரியம்மா பையன் அவனோட மனைவி இறந்து 3 வருஷம் ஆகுது இப்போ அவனுக்கு 40 வயசு ஆகுது

2 ஆம்பள பசங்க,

பெரியவனுக்கு 10 வயசு,

சின்னவனுக்கு 6 வயசு.


இப்போ அவன், பெரியப்பா, பெரியம்மா, 2 பசங்கனு வாழக்கை போய்க்கிட்டு இருக்கு.


பெரியம்மா நேத்து எங்க வீட்டுக்கு வந்து இருந்தாங்க.

பெரியம்மா & பெரியப்பா அவனுக்கு 2வது ஒரு கல்யாணம் பண்ணனும்னு முடிவோடு இருக்காங்க ஆனா அவன் எனக்கு கல்யாணம் எல்லாம் ஒன்னும் வேணாம்னு சொல்றான்.


இப்போதைக்கு சரி. பெரியம்மா பெரியப்பா பசங்களை பாதுக்குறாங்க, காலையில அவங்களுக்கு சாப்பாடு கட்டி கொடுத்து ஸ்கூல்ல கொண்டு போய் விட்டு கூட்டிகிட்டு வராங்க.

பெரியவங்க இருக்குற வரைக்கும் சரி அவங்களுக்கு பிறகு ?


பெரியம்மா பெரியப்பா காலத்துக்கு பிறகு பசங்க நல்ல வலந்த பிறகு இவனுக்கு ஒரு துணை வேணும் தானே ?


இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு பசங்களை அம்மா அப்பா கூட விட்டுட்டு போக ஒரு அப்பனுக்கு எப்படி மனசு வரும் ?


கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரே வீட்ல இருக்க முடியுமா ?


வர பொண்ணு இந்த பசங்களை எப்படி ட்ரீட் பண்ணுவா ?


அந்த பொண்ணுக்கு ஒரு குழந்தை பிறந்தா மொத்தம் 3 பசங்க இந்த காலத்துல பொருளாதாரம் ஒத்துழைக்குமா ?

இப்படி பல கேள்விகளுக்கு பதிலே இல்ல.


குடும்பத்துல ஒரு பொண்ணு இல்லனா அந்த குடும்பம் எவளோ பிரச்சனைகளை சந்திக்குதுனு நேத்து என் பெரியம்மா என் கிட்ட பேசினதை வெச்சி பாக்கும் போது வயித்துல புளியை கரைக்கிது.


இருக்கும் போது தெரியாத அவளோட அருமை. அவ இல்லனா என்ன ஆகும்னு ஒரு நிமிஷம் யோசிச்சி பாத்தா அய்யய்யோ நாம எல்லாம் ஒரு மை...... ம் புடுங்க முடியாதுன்னு நால்லாவே உணர முடியிது. 

அவ இடத்தை நிரப்ப உலகத்துல வேற யாருமே இருக்க முடியாதுன்னும் புரியிது.


எவளோ ஆட்டம் 

எவளோ திமிர்

எவளோ அகங்காரம்

எவளோ நம்பிக்கை எல்லாமே நாம தான்னு நினைச்சிக்கிட்டு இருக்கோம் ஆனா நேத்து பெரியம்மா பேசினது அழுகையையே வந்துடிச்சி.

நாம எதுவுமே இல்லை எல்லாமே அவ தான், நமக்கு பின்னாடி அவ இருக்கானு தைரியத்துல தான் நாம இவளோ ஆட்டம் போடறோம்னு மறுபடியும் இன்னொரு வாட்டி உணர வெச்சது பெரியம்மாவோட அழுகை.


இப்பதிவு பெண் தெய்வங்களுக்கு சமர்ப்பணம்.


பகிர்வு

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.