அம்பானியின் திருமணத்தில் உணவு சமைத்த இலங்கையர்கள்!

 


இந்திய கோடீஸ்வர தொழிலதிபர் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண வைபவத்திற்கு உணவு சமைப்பதற்காக இலங்கையில் இருந்து 13 சமையல்காரர்கள் தெரிவு செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்கள் நேற்றையதினம்(07) நாடு திரும்பியுள்ளனர்.

கொழும்பில் உள்ள சிட்ரஸ்(Citrus) ஹோட்டல் குழுவினரும்

“சிலோன் கரி கிளப்” (Ceylon Curry Club) உணவகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சமையல் கலைஞர்கள் குழுவினரும் சென்றிருந்தனர்.


இந்த 13 சமையல்காரர்களும் தங்களது உணவகங்களில் இலங்கை உணவுகளை சமீபத்திய முறைகளில் தயாரித்து வழங்கியுள்ளனர்.


மார்ச் 03ஆம் திகதி திருமண நிகழ்வில் கலந்துகொள்ளும் அழைப்பாளர்களுக்கு மதிய உணவு தயாரிக்கும் வாய்ப்பு இலங்கை சமையல் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டநிலையில், அவர்கள் தயாரித்த உணவுக்கான பாராட்டுக்களின் அடிப்படையில் கூடுதல் நாளாக கடந்த 4ஆம் திகதி நிகழ்விற்கான இரவு உணவைத் தயாரிக்கும் வாய்ப்பும் இலங்கைச் சமையல் கலைஞர்களுக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.


இந்த திருமண விழாவிற்கு இலங்கை சமையல் கலைஞர்கள் தவிர இங்கிலாந்து, துபாய், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சமையல் கலைஞர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.