தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!

 


நாங்கள் தமிழர்!


சபிக்கப்பட்ட நாட்டில் வாழ்ந்தாலும் இற்றைவரை சாய்க்கப்பட முடியாதவர்கள்.


நாங்கள் தமிழர்!


முப்படை கொண்ட விலைபோகாத் தங்கத் தலைவனைக் கண்ட உலகத்தின் ஒற்றை இனம்.


நாங்கள் தமிழர்!


பக்கத்து அரசும் பதினேழு பாராளும் அரசுகளும் சேர்ந்து பலியெடுத்தபோதும் இறுதிவரை மண்டியிடாத மான இனம். 


நாங்கள் தமிழர்!


இனம் வாழத் தம்மையே வெடிக்க வைத்த காக்கும் கடவுள்களைக் கண்ட ஏக இனம். 


நாங்கள் தமிழர்!


விதிகளை மீறிக் கதை முடிக்கப்பட்ட போதும் விரைவில் மீண்டெழுந்து #நீதி கேட்கும் ஈழத் தமிழினம்.


நாங்கள் தமிழர்!


கொரோனாக் கொடுயுகத்தில் உலகமே அழிந்துபோனாலும் இருந்ததைப் பகிர்ந்து பசியால் ஒரு தமிழனும் மடியாது காத்த கர்ணனின் பரம்பரை நம்மினம்.


நாங்கள் தமிழர்!


எல்லாளன், சங்கிலியன், பண்டாரவன்னியன், கரிகாலன் என்று காவிய நாயகர்களைக் கண்ட இனம்.


நாங்கள் தமிழர்!


பூகோள அரசியலும் துரோகத்தனமும் புதைத்து விட்டாலும் மீண்டுவரத் துடிக்கும் பீனிக்ஸ் இனம்.


நாங்கள் தமிழர்!


உயிர் வாழக் கடல் கடந்து போனாலும் செல்லுந் #திசையெங்கும் தலைவன் புகழ் பாடுமினம், தமிழ் கூறுமினம்.


நாங்கள் தமிழர்!


கஞ்சாவும் ஹெரோயினும் மதுவும் மாயையும் கூத்துக் கும்மாளங்களும் திட்டமிட்டு விதைக்கப்பட்டாலும் மீண்டுவரப் போராடும் ஈழத் தமிழினம்.


நாங்கள் தமிழர்!


காலங் கனியும்வரை #விடியலுக்கான வேளை நெருங்கும்வரை  காத்திருக்கும் தன்மானத் தமிழினம்.


தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!


அன்புரிமையுடன்,

சுகாஷ்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.