சாந்தன் அண்ணாவின் பெரிய ஆசை இதுதான்!!


என் அம்மாவின் கரங்களால் ஒரு வாய் சோறு உண்டால் போதும், எனக்கு எந்த நோயும் இல்லை’ என்று கூறிக்கொண்டே இருந்தார், எவ்வளவோ முயன்றோம் முடியவில்லை. சாந்தனை உயிருடன் அவர் தாயிடம் சேர்க்க முடியவில்லை என சட்டத்தரணி புகழேந்தி அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு முப்பது வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போதும் தொடர்ந்து சிறப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு தாயகம் திரும்ப இருந்த நிலையில் திடிரென உயிரிழந்திருந்தார்.

சாந்தனின் உயிரிழப்பு தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தழிப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

குறிப்பாக உயிரோடு வருவார் என எதிர்பார்த்திருந்த நிலையில் உயிரிழந்த நிலையில் தாயகத்திற்கு கொண்டு வரப்பட்டு பல்வேறு இடங்களிலும் அலைகடலெனத் திரண்டு கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.