கனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் அவசர நிலை பிரகடனம்!!
ஏப்ரல் 8ஆம் திகதி நிகழும் அபூர்வ முழு சூரிய கிரகணத்தைக் காண உலகெங்கிலும் ஏராளமானோர் காத்துக்கொண்டு இருக்கின்றனர் .
இந்த சூரிய கிரகணத்தை காண மிகச்சிறந்த இடங்களில் ஒன்றாக கனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சியை சூழவுள்ள பகுதி நேஷனல் ஜியோகிராஃபிக் அறிவிக்கப்பட்டுள்ளது .
இதன் காரணமாக கனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது .
ஏப்ரல் 8 ஆம் திகதி அரிய முழு சூரிய கிரகணத்தைக் காண , குறித்த பிராந்தியதிற்கு வரலாற்றில் அதிக மக்கள் கூடும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் எதிர்வு கூறியுள்ளனர் . இந்த காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது .
நீர்வீழ்ச்சியின் அருகே உள்ள விடுதிகள் ஏற்கனவே இந்த அரிய நிகழ்வை காணும் நோக்கில் பதிவு செய்யப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .
ஏப்ரல் 8ம் திகதி நடைபெறவிருந்த பல்வேறு நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தை தவிர்க்கும் வகையில் சில வீதிகள் அங்கு மூடப்பட உள்ளன.
நயாகராவின் பிராந்திய மாநகராட்சி நிகழ்விற்குத் தயாராக அவசரகால நிலையை அறிவித்துள்ளது . பாரிய போக்குவரத்து நெரிசல்கள், அவசரகால சேவைகள் மற்றும் செல்போன் நெட்வொர்க் போன்றவற்றில் அதிக தேவைகளை உள்ளடக்கிய சில கூடுதல் திட்டமிடல் அங்கு நடைமுறை செய்யப்பட வுள்ளது .
கிரகணம் காலையில் மெக்ஸிகோவின் பசிபிக் கடற்கரையில் ஏற்பட்டு டெக்சாஸிலிருந்து மைனே வரை அமெரிக்கா முழுவதும் தென்பட்டு , இறுதியாக பிற்பகலில் கிழக்கு கனடாவில் இருந்து வெளியேறும். உலகின் ஏனைய பெரும்பாலான பகுதிகள் ஒரு பகுதி கிரகணத்தை மாத்திரமே காண முடியும் என தெரிவிக்கப்படுகிறது .
கருத்துகள் இல்லை