யாழ் திருநெல்வேலி Food City உரிமையாளருக்கு தண்டப்பணம் அறவீடு!


யாழில் காலாவதியான பொருட்கள் உரிமையாளரிற்கு  சுமார் ஒரு இலட்சம் என்பதாயிரம் ரூபா தண்டம் அறவிடப்பட்டது.


திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையில் பொது சுகாதார பயிலுனர்கள் கோபிறாஜ், லிங்கேஸ், சஜீவன், றொய்ஸ்ரன் ஆகியோர் இணைந்து திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள food city கள் பரிசோதிக்கப்பட்டன. 


இதன்போது திகதி காலாவதியான பொருட்கள், வண்டு மொய்த்து பழுதடைந்த பொருட்கள் மற்றும் உரிய சுட்டுத்துண்டு இடப்படாத பொருட்கள் என்பன இரு food city இல் கைப்பற்றப்பட்டது. குறித்த food city உரிமையாளர்களிற்கு எதிராக  திங்கட்கிழமை மேலதிக நீதவான் நீதிமன்றில் பா. சஞ்சீவனால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 


இதன் போது ஒருவர் வருகைதரவில்லை. மற்றையவரிற்கு எதிராக 18 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் தண்டப்பணமாக 180,000/= அறவிடப்பட்டதுடன் கடுமையான எச்சரிக்கையும் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.