வருமான வரித்துறையிடம் சிக்கிய காங்கிரஸ் கட்சி!!

 


”காங்கிரஸ் கட்சியானது 1,800 கோடி ரூபாய்  அபராதம் செலுத்த வேண்டும்” எனக் கோரி வருமானவரித்துறை மனுத்தாக்கல் செய்துள்ளது.


காங்கிரஸ் கட்சியானது கடந்த 2017-18 நிதியாண்டு முதல் 2020-21 நிதியாண்டு வரை 4 ஆண்டுகளுக்கு வருமான வரிக் கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை என்றும், இதற்கு வட்டியுடன் கூடிய அபராதமாக 1,800 கோடி ரூபாய்  செலுத்த வேண்டும் எனக் கோரியே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில்  குறித்த மனுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடுக்க உள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது.


இதேவேளை நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தங்களின் நிதியை அரசு முடக்க பார்ப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.