யுக்திய தொடரும்!

 


நாட்டில் போதைப்பொருள் மோசடி மற்றும் பாதாள குழு செயற்பாடுமுற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதாக மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வரை யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என  பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.


காலிக்கு  இன்று கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் ஊடகங்களை சந்தித்துக்  கருத்துத் தெரிவித்த போதே  இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இது குறித்து தேஷபந்து தென்னக்கோன் மேலும் தெரிவித்துள்ளதாவது ”  இந்த நாட்டில் போதைப்பொருள் மோசடி மற்றும் பாதாள குழு செயற்பாடு முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வரை யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.


ஒவ்வொரு நாளும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற சுற்றிவளைப்பு நடவடிக்கை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


நாட்டுமக்கள் பாதாள குழுசெயற்பாடுகள் போதைப்பொருள் விற்பனை தொடர்பில் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்.எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.


இதேவேளை 11 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய தடைசெய்யப்பட்டவாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொதுபாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணை பிரிவினரால் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.


இதன்படி லொறி வேன் உட்பட 2 முச்சக்கரவண்டிகள் 9 மோட்டார்சைக்கிள்கள் 3 மீன்பிடிபடகுகள் மற்றும் 5 கோடிரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய காணி மற்றும் வீடு வர்த்தக நிலையங்கள் என்பன இவற்றுள்ள உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.