துரத்தப்படும் நேர்மையான மூத்த நிர்வாக அதிகாரி !


 வடக்கில் வெற்றிடம் இருந்தும் வெளியில் துரத்தப்படும் நேர்மையான மூத்த நிர்வாக அதிகாரி .


வடக்கு மாகாண நான்கு அமைச்சுகளின் செயலாளர் வெற்றிடம் உள்ள நிலையில் மூத்த நிர்வாக அதிகாரியான எஸ் குகநாதனை மாகாணத்திலிருந்து வெளியில் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.


வடக்கு மாகாணத்தில் வடக்கு ஆளுநரின் செயலாளர் ,கல்வி அமைச்சின் செயலாளர் ,சுகாதார அமைச்சின் செயலாளர் ,மற்றும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் ஆகிய பதவி நிலைகள் நிரப்பப்படாமல் பதில் செயலாளர்கள் கடமையில் உள்ளனர்.


இந்நிலையில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவலக அமைத்தினால் நிர்வாக சேவை சிறப்பு தர அதிகாரிகளாக வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளராக இருந்த பிரணவநாதன் வட மாகாண உள்ளூராட்சி அமைச்சின் உதவிச் செயலாளராக இருந்த குகநாதன் கிளிநொச்சி மாவட்ட செயலக சமுர்த்திப் பணிப்பாளர் அன்ரன் எழிலரசி ஆகியோர் சிறப்பு தர அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றனர்.


இந்நிலையில் வட மாகாண ஆளுநரின் செயலாளர் உட்பட மூன்று அமைச்சுக்களின் செயலாளர்களின் பதவிகள் வெற்றிடமாக உள்ளது.


அதுமட்டுமல்லாது வட மாகாண பிரதம செயலாளர் (நிர்வாகம்) கடமையாற்றும் ரூபினி வரதலிங்கமும் சில மாதங்களில் ஓய்வு பெற உள்ளார்.


ஆனால் வடக்கு மாகாணத்தில் வெற்றிடமாக உள்ள நான்கு செயலாளர் பதவிகளை முழுமையாக நிரப்பாமல் வடக்கு மாகாண அமைச்சில் கடமையாற்றி சிறப்புத் தர அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற எஸ் குகநாதனை வடக்கு மாகாணத்திற்குள் உள்ளீர்க்காமல் மத்திக்கு விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் மும்மரமாக இடம் பெற்று வருகிறது.


எஸ் குகநாதன் வடக்கு நிர்வாகத்தில் நேர்மையான அதிகாரி என்ற பெயர் பெற்ற ஒருவராகக் காணப்படும் நிலையில் அவர் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உதவி தேர்தல் ஆணையாளராகவும் கடமையாற்றியவர்.


அதன் பின்னர் மாகாண காணி ஆணையாளராக பதவி வகித்த காலத்தில் அரச காணிகளை பலவந்தமாக சிலர் கையகப்படுத்த முனைந்த நிலையில் அதற்கு கையெழுத்து போட மாட்டேன் என உறுதியாக நின்றவர்.


அதன் காரணமாக குறித்த பதவியில் இருந்து வலுக்கட்டாயமாக விலக்கப்பட்டு மாகாண பேரவை செயலகத்துக்கு மாற்றப்பட்டார்.


அவருக்கு நடந்த அநீதிகளை கேள்வியுற்ற அப்போதைய வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அவரது திறமைகளை கருத்தில் கொண்டு வட மாகாண பிரதம செயலாளர் நிர்வாகத்துக்கு நியமித்தார். 


பின்னர் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா பதவி விலகிய நிலையில் புதிய ஆளுநராக பிஎச்எம் சாள்ஸ் நியமிக்கப்பட்ட நிலையில் அவரைக் குறித்த பதவியில் இருந்து விலக்கி உள்ளூராட்சி அமைச்சின் உதவிச் செயலாளராக நியமித்தார்.


இந்நிலையில் தற்போது பொது நிர்வாக சிறப்பு தர அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற போதும் அவர் ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஒரு வருடங்களே உள்ளது.


வடக்கு மாகாண அமைச்சில் சிறப்பு தர அதிகாரிகளுக்கான பெற்றிடம் காணப்படும் நிலையில் குகநாதன் அமைச்சு ஒன்றின் செயலாளராக நியமிக்கப்பட்டால் அவரின் நேர்மையான செயல்பாடுகள் சிலருக்கு சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதற்காகவே அவரை வடக்கிலிருந்து வெளியில் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.