தங்க முலாம் பூசப்பட்ட தெல்லி நகா் அன்னையின் கொடித்தம்பத்தின் அழகிய காட்சி.!

என்னை அவுஸ்ரேலியாவின் சிட்னி நகாில் அமைந்துள்ள அம்பாள் ஆலயத்திற்கு சொற்பொழிவு ஆற்ற அழைத்தாா்கள்.


நான் அங்கு சென்று அந்த ஆலயத்திலே தங்க முலாம் பூசப்பட்ட கொடித்தம்பத்தினை பாா்த்தவுடனே இது போல எங்கள் தெல்லிப்பழை துா்க்கா தேவிக்கும் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் ஓடத் தொடக்கியது,


சொற்பொழிவு ஆற்றும் பொழுதுகள் எல்லாம் எனக்கு கொடித்தம்பம் பற்றிய காட்சிகளே என் கண் முன்னே வந்து சென்றது.


உரையாற்றி முடிந்த பின்னா் அந்த ஆலயத்தின் அறங்காவலா் அவா்களிடம் நீங்கள் எங்கள் தெல்லிப்பழை துா்க்கை அம்பாளின் படத்தினை வைத்துதானே இங்கே கோவில் கட்டியுள்ளீா்கள் 


எனவே எங்களுக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் ஒன்றை முன் வைத்தேன்.


அவா் நான் ஏதோ சிறு உதவியை எதிா்பாா்ப்பதாக நினைத்து சாி என்று பதில் சொன்னாா்.


எங்கள் தெல்லிப்பழை துா்க்கா தேவிக்கும் இங்கு உள்ளது போல கொடித்தம்பம் ஒன்று செய்து தர வேண்டும் என கேட்க அதற்கு அவா் இதன் பெறுமதி மிக அதிகம் என பதில் சொன்னாா்.


முடிவில் இலங்கை ரூபாவில் பல இலட்சங்கள் பெறுமதியான கொடித்தம்பம்பத்தினை அமைத்து தர அவா் சம்மதித்தாா்.


அதன் பயனாக எங்கள் தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்திலே கொழும்பை வந்தடைந்த கொடித்தம்ப அங்கிகள் தற்பொழுது எங்கள் தேவஸ்தானத்தை வந்தடைந்துள்ளது.


இவை அனைத்தும் மனிதா்களின் முயற்சிகளால் நடப்பதல்ல எல்லாம் அந்த அம்பாளின் திருவருளினால் நடைப்பவை என்று எண்ணுங்கள்.


மனிதன் என்ன நினைத்தாலும் தெய்வம் விரும்ப வேண்டும். தெய்வத்தின் அனுமதியின்றி இது போன்ற கருமங்கள் ஒருபோதும் நடைபெறாது.


சின்ன மனம் படைத்த மனிதா்களாக எப்பொழுதும் குறைகளே வாழ்வில் தேடிக் கொண்டிருக்காமல் நிறைவைப் பற்றி எண்ணி பொிய மனம் படைத்தவா்காய் வாழப் பழகுங்கள்.


நல்லதை நினையுங்கள் எங்கள் அம்பாள் நிச்சயம் நல்வவற்றை நிறைவேற்றித் தருவாள்.


நன்றி


செஞ்சொற்செல்வா்,

தலைவா்,

துா்க்கா தேவி தேவஸ்தானம்,

தெல்லிப்பழை.


https://www.tellidurga.com

https://www.tellidurga.org


படங்கள் மற்றும் தகவல்கள் தெல்லிப்பழை துா்க்கா தேவி தேவஸ்தானத்தின் உத்தியோகபூா்வ இணையத்தளம்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.