யாழ்ப்பாணம் வடக்கின் சுற்றுலா மையமாக எழில் கொஞ்சும் கடற்கரை!

வடக்கின் சுற்றுலா மையமாக யாழ்பாணமானது காணப்படுகின்றது. யாழ்ப்பாண மாவட்டமானது இயற்கை அழகினையும் எழில் கொஞ்சும் கடற்கரையினையும் உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. இதுதவிர சிறந்த காலநிலை தன்மையினை சுற்றுலாத்துறைக்காக கொண்டுள்ளது. அத்துடன் ஈரப்பதன் நிலைமைகள் உலர் அயன பகுதிகள், சிறப்பான சுவாசிக்கக்கூடிய காற்றுகள் போன்ற அனைத்தும் உள்ளடங்கலாக காணப்படுகின்றது. 


வெப்பநிலை பற்றி பார்க்கும்போது ஏப்ரல்-செப்டம்பர் வரையிலான காலப்பகுதிகளில் அதிக வெப்பநிலையினையும் டிசம்பர்-பெப்ரவரி வரை குளிரான காலநிலையினையும் கொண்டு காணப்படுகின்றது. இக்காலநிலை தன்மையானது சுற்றுலா மேற்கொள்ள சிறந்த பருவமாகும். தரைத்தோற்றத்தினை அவதானிக்குமிடத்து கரையோர சமவெளியினை கொண்டும், அழகியத்தீவுகளினையும், பல்லுருவத்தன்மை கொண்ட கடற்கரைகளினையும் , பாரிய மணல் மேடுகளினையும் கொண்டு காணப்படுகின்றது. இதனால் யாழ்ப்பாண மாவட்டமானது அதிகளவிலான பயணிகளினை கவருகின்றது.


#jaffnafort #Jaffna  #instatraveling #instaphotography #travelphotography #travelsrilanka #travelsrilankawithus #visitsrilanka #wonderofasiasrila#beautifulsrilanka #traveltheworld #travelgram #travelgramsl #travelepisodes #eamazinglanakatravel #travelguide #travelinstyle #exploresrilanka #ceylontraveldiaries #visitsl #srilanakanlife #thingstodosrilanka #biketravelling #naturephotography #srilanakantours #srilanakantourism


Thanks to Focus Travel Srilanka














கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.