நான்கு கோடி பெறுமதியான போதைபொருள் மீட்பு !

 


இசை கருவிக்குள் மறைத்து வைத்திருந்த நான்கு கோடி பெறுமதியான போதைபொருள் மீட்பு 


கொட்டாஞ்சேனை, சுமித்ராராம மாவத்தையிலுள்ள வீடொன்றை சுற்றிவளைத்த அடுருப்புவீதிய பொலிஸார், சுமார் நான்கு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இசைக்கலைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர். 


சந்தேக நபருடன் 372 கிராம் ஹெரோயின், 1 கிலோ  558 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


 அடுருப்புத்தெரு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், பொலிஸ் குழுவொன்று குறித்த வீட்டை சுற்றிவளைத்து சோதனை நடத்தியதுடன், இசைக்கருவிகளுக்கு மத்தியில் டிரம்மொன்றில் போதைப்பொருள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


   சந்தேக நபர் சில காலமாக இசை நிகழ்ச்சி நடத்துதல், இசைக்கருவிகளை வாடகைக்கு எடுப்பது போன்ற போர்வையில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.