தஞ்சாவூர் குடைமிளகாய் சாம்பார்செய்வது எப்படி??


தேவையான பொருள்கள்


துவரம்பருப்பு.....200 கிராம்


மஞ்சள்பொடி.......சிறிதளவு


பெருங்காயம்.......சிறிதளவு


தஞ்சாவூர் குடைமிளகாய்.....100 கிராம்


சின்ன வெங்காயம்.......50 கிராம்


தக்காளி......100 கிராம் 


புளி.........1 எலுமிச்சங்காய் அளவு


தேங்காய்.......கால் மூடி


மாங்காய்.......150 கிராம்


எண்ணெய்.......3 ஸ்பூன்


உளுத்தம்பருப்பு .....1 ஸ்பூன்


 கடுகு......அரை ஸ்பூன்


மிளகாய் வற்றல்......2


உப்பு.......தேவையான அளவு


செய்முறை :


🔥 துவரம்பருப்பை மஞ்சள்பொடி, பெருங்காயம் சேர்த்து வேகவிட்டு மசித்துக்கொள்ளவும், குடைமிளகாயை சிறிது காம்பு விட்டு நறுக்கி நான்காக வகிர்ந்து காம்போடு வைத்து தண்ணீரில் அலசி விதைகளை நீக்கவும். 


🔥 புளியை கெட்டியாகக் கரைத்து உப்பு சேர்த்து அதனோடு இந்த மிளகாயைக் கிளறி 


🔥 கால் மணிநேரம் ஊறவிடவும். வெங்காயம் உரித்துக்கொள்ளவும். மாங்காயை தோலோடு மிளகாய் சைசுக்கே நறுக்கவும். தக்காளி நறுக்கவும். தேங்காயை அரைத்துக்கொள்ளவும்.


🔥 குக்கரில் மிளகாய் கலவையைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடவும்.


🔥 பாதி கொதித்து வரும்போது தக்காளி. வெங்காயம், மாங்காய் சேர்த்து பருப்பைக் கொட்டி அரைத்த தேங்காய் சேர்த்து மீண்டும் கொதிக்கவிடவும். 


🔥 மூடி வைக்கவேண்டும். அடுத்து எண்ணெயில் கடுகு, மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்துக் கொட்டி கொத்துமல்லி சேர்க்கவும். 


🔥 இவ்வாறு செய்யும் போது மிளகாய் காரம் மட்டாகி குழம்பு புது சுவையோடு இருக்கும்.


🔥 இதை ரைஸ், சப்பாத்தி, ஃபுல்கா, பூரி, இட்லி, தோசை, பொங்கல், உப்புமாவோடு பரிமாறலாம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.