தயிர் கத்தரிக்காய் செய்வது எப்படி?


தேவையான பொருள்கள்:


நறுக்கிய கத்தரிக்காய்...... 3


தயிர் ......அரை கப்


மெல்லியதாக நறுக்கிய 

குடைமிளகாய்...... 1


மெல்லியதாக ......நறுக்கிய


வெங்காயம் ......2


புளி பேஸ்ட் .....2 ஸ்பூன்


கரம் மசாலாபொடி .....1 ஸ்பூன்


சீரகப்பொடி..... 1 ஸ்பூன்


மஞ்சள்பொடி கால் ஸ்பூன்


தனியா பொடி


1 1 ஸ்பூன்


பொடியாக நறுக்கிய இஞ்சி 1 டேபிள் ஸ்பூன்


பூண்டு விழுது.......1 டேபிள் ஸ்பூன்


கிராம்பு....... 2


எலுமிச்சை சாறு ......1 ஸ்பூன்


உப்பு .......தேவையான அளவு


எண்ணெய்......2 டேபிள் ஸ்பூன்


செய்முறை :


☀    சிறிது எண்ணெயைக் காயவிட்டு வெங்காயத்தை நன்றாக வதக்கவும். பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.


☀     குடைமிளகாய் சேர்த்து ஒன்று அல்லது இரண்டு நிமிடம் வதக்கவும். கத்தரிக்காயை போட்டு ஒன்று அல்லது இரண்டு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு வதக்கவும். கரம்மசாலா, சீரகப்பொடி, தனியாபொடி, மஞ்சள்பொடி. 


☀    உப்பு, கிராம்பு. இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும். தயிர், புளி பேஸ்ட் சேர்த்து கொதிக்கவிடவும். எலுமிச்சைச் சாறு சேர்த்த மூடி வைத்து 5-10 நிமிடம் கொதிக்கவிடவும் .


☀   வெங்காய வட்டங்களை வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.